அப்துல்லா பாலம்
அப்துல்லா பாலம் (Abdullah Bridge) என்பது இந்தியாவில் உள்ள சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள சிறிநகரில் சீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முதலாவது காங்கிரிட் பாலமாகும். அருகில் அமைந்துள்ள சீரோ பாலத்திற்கு மாற்றாக அமைந்த புதிய இப்பாலம் பதாமி பாக் நகரின் ஒரு பகுதியான சன்வார் மற்றும் இராய்பாக் பகுதிகளை இணைக்கிறது. சம்மு காசுமீர் அரசியலில் முதன்மை பங்களித்த இந்திய அரசியல்வாதியான சேக் அப்துல்லாவின் பெயர் இப்பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
Read article